search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமானப் பணிகள்"

    • சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளது.
    • போக்குவரத்து மாற்றங்கள் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரெயில் நிலையத்தில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் நாளை (21-ந்தேதி) முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி இடதுபுறமாக செல்லலாம். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.கே.என். ரோடு மற்றும் ரெயில் நிலைய சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மவுண்ட் போஸ்ட் ஆபிஸ் நோக்கி செல்ல அனுமதி இல்லை.

    ஆலந்தூர் சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி. சாலையில் செல்வதற்கு வலதுபுறமாகவோ அல்லது இடப்புறமாகவோ செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நகரப்பகுதிக்குள் மேம்பாலம் வேறு எங்கும் இல்லை. டி.எம்.எப்., பாலம் சுரங்க பாலமாக உள்ளது.
    • நகரில் ஒரே ெரயில்வே மேம்பாலம் மட்டும் உள்ளதால் அங்கு பெரும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.

     திருப்பூர்:

    திருப்பூர் நகரை இரண்டாக பிரிக்கும் விதமாக ெரயில்வே பாதை அமைந்துள்ளது. வடக்கு மற்றும் தெற்கு நகரப் பகுதிகளை இணைக்கும் விதமாக ரெயில் நிலையம் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக நகரப்பகுதிக்குள் மேம்பாலம் வேறு எங்கும் இல்லை. டி.எம்.எப்., பாலம் சுரங்க பாலமாக உள்ளது.வஞ்சிபாளையம் மற்றும் ஊத்துக்குளி பகுதியில் மட்டுமே ெரயில்வே மேம்பாலங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன.நகரில் ஒரே ெரயில்வே மேம்பாலம் மட்டும் உள்ளதால் அங்கு பெரும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.

    இதற்கு தீர்வு காணும் விதமாக ஊத்துக்குளி ரோடு, காலேஜ் ரோடு பகுதிகளில் ரெயில் பாதையை கடந்து மேம்பாலம் கட்ட திட்டமிட்டு பணிகள் நடந்தது. பல்வேறு காரணங்களால் இந்த பாலம் கட்டுமானப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு பின் இதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் தற்போது எஸ்.ஆர்.சி., மில்ஸ் பாலம் கட்டுமானப் பணி முற்றிலும் நிறைவடைந்துள்ளது. பாலம் முடிவடையும் சூர்யா நகர் பகுதியில் அணுகு சாலையாக தார் ரோடு அமைக்கும் பணி தற்போது நடைபெறுகிறது.

    இதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பி மண் கொட்டி சமன் செய்யும் பணி நடக்கிறது. பாலம் துவங்கும் இடத்தில் சாய்வு தளத்தில் கற்கள் பதிக்கும் பணியும் முடிவடையும் நிலையில் உள்ளது.பாலம் முழுவதும் இரு புறங்களிலும் தெரு விளக்குகள் அமைக்க கேபிள் இணைப்பு அளித்து விளக்கு கம்பங்கள் அமைக்கும் வகையிலும் பணி தற்போது நடக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த பின் பாலம் போக்குவரத்துக்கு திறக்கப்படும் எனத்தெரிகிறது.

    ×